×

டிட்வா புயல் மேலும் வலுவடைவதற்கான காரணிகள் தற்போது வரையிலும் இல்லை: அமுதா பேட்டி!

 

சென்னை: “டிட்வா புயல் மேலும் வலுவடைய, தற்போது வரை காரணிகள் இல்லை. புயலாகவே இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி அளித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ.28) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (நவ.29) நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

 

Tags : Titva cyclone ,Amudha ,Chennai ,Chennai Meteorological Department ,Titva’ ,Bay of Bengal, ,Nagai ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்