தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் புயல் மையம். புயலானது வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
