×

தஞ்சையில் காதல் பிரச்சனையில் தற்காலிக ஆசிரியை வெட்டிக்கொலை..!!

தஞ்சாவூர் : தஞ்சையில் காதல் பிரச்சனையில் தற்காலிக ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். காவியாவும், அஜித்குமார் என்பவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கவியாவுக்கு வேறு ஒரு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் இன்று காலை அரசுப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காவியாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

உடனடியாக அருகில் இருந்த கிராமமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவியாவின் உடலை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் என்ன காரணம் என்று விசாரித்ததில் காதல் விவகாரத்தில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்த காதலன் அஜித்குமார் கைது செய்யப்பட்டு தற்போது அம்மாபேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thanjavur ,Kavya ,Mariamman Temple ,Alangudi Government Primary School ,Ajith Kumar ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...