சிவகாசி, நவ.27: சிவகாசியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி காளியம்மன் கோவில் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பொதுகழிப்பிடம் முன்பு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முருகன் காலனியை சேர்ந்த முத்துராஜ் மகன் சுடலைப்பாண்டி(25), பட்டிதெருவை சேர்ந்த கணேசன் மகன் தங்கராஜ் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
