×

மடப்புரம் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.37.38 லட்சம்

திருப்புவனம், டிச.18: திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பெளர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு பணம்,தங்கம்,வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் இடுவார்கள்.

இக்கோயில் உண்டியல்கள் 40 நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று உண்டியல்கள் ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், கூடுதல் இணை ஆணையர் பிரதிபா, செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

நிரந்தர 9 உண்டியல்களில் ரூ.36லட்சத்து 65 ஆயிரத்து 464 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூ.73 ஆயிரத்து 15 ரூபாய் மற்றும் தங்கம் 240 கிராம், வெள்ளி இனங்கள் 312 கிராம் 800 மிலி, வெளி நாட்டு கரன்சிகள் சிங்கப்பூர் டாலர் 8, குவைத் தினார் 6, மலேசியா கரன்சி 3, யுஏஇ 5 காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது என கோயில் செயல் அலுவலர் கவிதா தெரிவித்தார். உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வர் இசக்கி செல்வம், கோயில் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கோவில் ஊழியர்கள், மதுரை அன்னபூரணி சேவாசங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Madapuram Temple ,Tirupwanam ,Katha Ayyanar ,Amman Temple ,Ichoil ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்