×

திண்டுக்கல்லில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பணிபுறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த அரசாணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கருணை அடிப்படையில் நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். வருவாய் துறை அலுவலர்களின் பணி நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Revenue Department ,Dindigul ,Dindigul District Revenue Department Officers Association ,John Bastin ,District Secretary ,Suganthi ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது