×

தங்கம் திருட்டு விவகாரம் சபரிமலை தந்திரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டுள்ள தங்கத்தகடுகளை செம்புத் தகடுகள் என்று போலியான சான்றிதழ் தயாரித்து பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்று மோசடி செய்த விவகாரத்தில் இதுவரை 2 முன்னாள் தேவசம் போர்டு தலைவர்கள், அதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சபரிமலை கோயில் தந்திரிகளான கண்டரர் மோகனர், கண்டரர் ராஜீவரர் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது தங்கத்தகடுகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே தான் அனுமதி வழங்கியதாகவும், வேறு எதுவும் தனக்குத் தெரியாது என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறினார். மேலும் உண்ணிகிருஷ்ணன் போத்தியை சபரிமலையில் வைத்து மட்டுமே தனக்குத் தெரியும் என்றும், அவரைக் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தனக்குத் தெரியாது என்றும் அவர் போலீசிடம் தெரிவித்தார். இதற்கிடையே தேசவம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு கொல்லம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tags : Special Investigation Team ,SIT ,Sabarimala Thantris ,Thiruvananthapuram ,Devaswom Board ,Sabarimala Ayyappa temple ,Chennai ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...