பாட்னா: பாட்னாவில் கடந்த 20 ஆண்டுகளாக லாலு பிரசாத், ரப்ரி தேவி குடும்பத்தினர் வசித்து வரும் அரசாங்க பங்களாவை காலி செய்யுமாறு பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஹார்டிங் சாலையில் உள்ள ஒரு வீடு ஒதுக்கியுள்ளதாக மாநில கட்டிட கட்டுமானத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்ஜேடி மாநில தலைவர் மங்கனிலால் மண்டல் கூறுகையில், மேலவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள ரப்ரி தேவி பங்களாவை காலி செய்ய மாட்டார். என்ன ஆனாலும் அதை நாங்கள் சந்திக்க தயார். வீட்டை காலி செய்ய சொல்வதற்கு 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் ஏன் காத்திருந்தார் ’’ என்றார்.
