- அயோத்தி திருவிழா
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- புது தில்லி
- மோடி
- அயோத்தி
- ராம் கோயில்
- பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்
- பாப்ரி…
புதுடெல்லி: அயோத்தி ராமர்கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் அங்கு காவி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வை பாகிஸ்தான் நேற்று விமர்சனம் செய்தது. இந்த விழா குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்ததுடன்,‘பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியிருக்கிறார்கள். இது இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீதான அழுத்தத்தின் பிரதிபலிப்பாகும். சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையில் ஆழ்ந்த பதட்டமான பதிவைக் கொண்ட அண்டை நாடான இந்தியா, மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய எந்த தார்மீக நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியது.
இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘மதவெறி, அடக்குமுறை மற்றும் சிறுபான்மையினரை முறையாக தவறாக நடத்துவதில் ஆழமாக கறை படிந்த பதிவைக் கொண்ட ஒரு நாடு பாகிஸ்தான். எனவே மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய பாகிஸ்தானுக்கு தார்மீக நிலை இல்லை. பாகிஸ்தான் தனது சொந்த மோசமான மனித உரிமைகள் பதிவில் கவனம் செலுத்துவது நல்லது’ என்றார்.
