×

59 இன்ஸ்பெக்டர்களில் 17 பேர் விழுப்புரம் சரகத்தில் நியமனம் வடக்கு மண்டலத்தில் பதவி உயர்பெற்ற

வேலூர், நவ.27: தமிழக காவல்துறையில் வடக்கு மண்டலத்தில் பதவி உயர்வுபெற்ற 59 இன்ஸ்பெக்டர்களில் 17 பேர் விழுப்புரம் சரகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் பி.விவேகானந்த், விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்ற எஸ்.முத்துஈஸ்வரன், கடலூர் மாவட்டம் புவனகிரி சர்க்கிளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பதவி உயர்வு பெற்ற பி.நாகராஜன், விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் காவல் நிலையத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் இருந்து பதவி உயர்வு பெற்ற ஜி.எழில்வேந்தன், கடலூர் மாவட்டம் பென்னாடம் காவல் நிலையத்துக்கும் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் உட்பட வடக்கு மண்டலத்தில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற 59 பேரில் 17 பேர் விழுப்புரம் சரக காவல் நிலையங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதேபோல் பதவி உயர்வு பெற்று வடக்கு மண்டலத்தில் வேலூர் சரகத்தில் பணி நியமனம் பெற்று பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள 7 பேருக்கு இன்று பணியிடம் ஒதுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Villupuram ,Northern Zone ,Vellore ,Tamil Nadu Police ,Inspector ,P. Vivekanand ,Ranipet district ,Vadaponparapikum ,Villupuram district ,
× RELATED சென்டர்மீடியன் மீது கார் மோதி சேலம்...