×

சந்திரசூடேஸ்வரர் கோயிலில் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை

ஓசூர், நவ.27: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் உண்டியலில் ரூ.24 லட்சம் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு முன்னிலையில், கோயிலில் உள்ள 8 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள், கோயில் பணியாளர்கள் கலந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 உண்டியல்களிலும் ரூ.24 லட்சத்து 10 ஆயிரத்து 654 பணமும், 12 கிராம் தங்கம், 149 கிராம் வெள்ளி இருந்தது. உண்டியல் எண்ணும் பணியின் போது, கோயில் செயல் அலுவலர் சின்னசாமி, சரக ஆய்வர்கள் சக்தி (ஓசூர்), காவேரிப்பட்டணம் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chandrachudeshwarar temple ,Hosur ,Chandrachudeshwarar hill temple ,Assistant Commissioner of Charities ,Mahavishnu ,
× RELATED சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்