×

தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பெண்ணுக்கு அரசுப் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பெண்ணுக்கு அரசுப் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுடன் முதல்வர் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணி பார்வை மாற்றுத்திறனாளி கீர்த்திகாவுக்கு தரப்பட்டுள்ளது. அண்மையில் தென்காசி அருகே நடந்த பேருந்து விபத்தில் கீர்த்திகாவின் தாய் மல்லிகா உயிரிழந்தார். சிறு வயதில் தந்தையை இழந்த நிலையில் தாயும் விபத்தில் உயிரிழந்ததால் கீர்த்திகாவுக்கு அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

Tags : Chief Minister MLA ,Tenkasi ,K. Stalin ,Chennai ,Kirtika ,Puliangudi Municipal Office ,Disabled Kirithika ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி