ஆம்பூர்: ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகே அமீர் பாஷா(50) என்பவரது வீட்டின் மேல் மாடியில் அக்பர் பாஷா(27) என்பவர், மனைவி ஆஸ்லியா தஸ்மீன்(23) மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர்களது 3வது பெண் குழந்தை ஹர்பா பாத்திமா பிறந்து 3 மாதங்களே ஆகிறது. வீட்டின் படிக்கட்டு அடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை தாய் ஆஸ்லியா தஸ்மீன் நேற்று வீசி கொன்றுள்ளார். விசாரணையில் உடல் நலம் பாதிப்பு காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாமல், தண்ணீர் தொட்டியில் வீசி விட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து ஆஸ்லியா தஸ்மீனை போலீசார் கைது செய்தனர்.
