விருதுநகர்: விருதுநகர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சாவித்ரி (50). கடந்த மாதம் ராஜபாளையம் பகுதியில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உள்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு உள்பட மேலும் சில வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி எஸ்பி, இன்ஸ்பெக்டர் சாவித்ரியிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்த அறிக்கையை சிபிசிஐடி ஐஜிக்கு தாக்கல் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாவித்ரி, சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
