×

ரூ.252 கோடி போதைப்பொருள் வழக்கு; நடிகர் சிந்த்தாந்த் கபூர் போலீசில் ஆஜர்

மும்பை: ரூ.252 கோடி போதைப்பொருள் சிக்கிய வழக்கில் நடிகர் சிந்த்தாந்த் கபூா் ேநற்று போலீசில் ஆஜரானார். மகாராஷ்ரா மாநிலம் சாங்கிலியில் கடந்த ஆண்டு ரூ.252 கோடி மதிப்பிலான எம்டி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இந்த போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான சலீம் தோலா மற்றும் அவரது மகன் தஹேர் தலைமையில் நடப்பதும், அவர்கள் அரபு நாட்டில் இருந்து இந்த செயலை நடத்துவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கடந்த ஜூன் மாதம் தஹேரை கைது செய்து நாடு கடத்தினர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முகமது சலீம் முகமத் சுகைல் ஷேக் என்பவரை கடந்த 5ம் தேதி துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில், சலீம் மும்பை மற்றும் வெளிநாடுகளில் அரசியல்வாதிகள், குண்டர்கள், திரை மற்றும் பேஷன் பிரபலங்களுக்கு போதை பார்ட்டி ஏற்பாடு செய்து கொடுத்து தெரிய வந்தது.

இந்த பார்ட்டியில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் உறவினர் அலிஷா பார்கர், நடிகர்கள் நோரா பதேஹி, ஷ்ரத்தா கபூர் மற்றும் அவரது சகோதரர் சித்தாந்த் கபூர், திரைப்பட தயாரிப்பாளர்களான அப்பாஸ்-முஸ்தான், ராப்பர் லோகா, சமூக ஊடக பிரபலம் ஓர்ஹான் அவத்ரமணி(எ) ஓர்ரி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜீஷன் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சமூக ஊடக பிரபலம் ஓர்ஹான் அவத்ரமணி(எ) ஓர்ரி-க்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர்.

ஆனால் ஓர்ரி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகர் சிந்த்தாந்த் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று அவர் கோரேகாவில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆஜரானார். அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு சித்தாந்த் பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chintdanth Kapoor ,Mumbai ,Sangli, Maharashtra ,
× RELATED அணு சக்தி துறையில் தனியார்...