- ஜனாதிபதி
- முர்மு
- புது தில்லி
- இந்திய வருவாய் சேவை
- சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்
- திரௌபதி முர்மு
- ராஷ்டிரபதி பவன்
புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பயிற்சி முடித்த இந்திய வருவாய் சேவை (சுங்க மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர்.
அவர்களிடம் ஜனாதிபதி முர்மு பேசியதாவது:
வரி வசூலிப்பதில் வெளிப்படையான, பொறுப்புணர்வு மிக்க, தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை உருவாக்க வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதில் வரி வசூல் மிக முக்கியமானது. வரி வசூல் என்பது, வரி செலுத்துவோருக்கு குறைந்தபட்ச அசவுகரியத்துடன் சுமூகமான செயல்முறையாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வரி வசூல் பற்றி கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ‘ஒரு அரசானது, தேனீயை போல வரி வசூலிக்க வேண்டும்.
தேனீ ஒரு பூவிலிருந்து சரியான அளவு தேனை சேகரிக்கும். இதனால் தேனீ, பூ இரண்டுமே உயிர் வாழ முடியும்’ என்றார் சாணக்கியர். அதுபோல வரி வசூல் இருக்க வேண்டும். வரி விதிப்பு ஒரு தடையாக அல்ல நம்பிக்கை, நியாயத்தின் பாலமாக செயல்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி முர்மு கூறினார்.
