- பாக். பெஷாவர்
- பாக்கிஸ்தான்
- கைபர் பேக்தன்க்வா
- தெஹ்ரீக்-இ-தாலிபான்
- பன்னு மாவட்டம்
- வடமேற்கு கைபர் பக்துன்க்வா
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்தன்க்வா மாகாணத்தில் பன்னு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
இதன் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
