×

துணை கலெக்டர் கண்டித்ததால் மனஅழுத்தம் எஸ்ஐஆர் பணியில் மயங்கி விழுந்த விஏஓ

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை – முனுமாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (47). பேராவூரணி தாலுகா கொளக்குடி கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வரும் இவருக்கு, மருங்கப்பள்ளம் – சாந்தாம்பேட்டை பகுதியில் எஸ்ஐஆர் பணி வழங்கப்பட்டுள்ளது. சாந்தாம்பேட்டை கிராமத்தில் உள்ள 1047 எஸ்ஐஆர் படிவங்களை வீடுகளில் வழங்கி விவரங்கள் சேகரித்து வருகிறார். இதில் 400 படிவங்களை திரும்ப பெற்று கணினியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டதாகவும், சர்வர் கோளாறு காரணமாக பதிவேற்றம் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் மீளாய்வு கூட்டத்தில் தொகுதி தேர்தல் அலுவலரும், முத்திரைத்தாள் துணை கலெக்டருமான கலியபெருமாள், ஒரு சதவீதம் மட்டுமே நீங்கள் பதிவேற்றம் செய்துள்ளீர்கள். உங்களுக்கு தெரியவில்லை என்றால் கொடுங்கள் நான் வேறு ஆளை வைத்து பதிவேற்றம் செய்து கொள்கிறேன் என கூறினாராம். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த பழனிவேல், நேற்றுமுன்தினம் மாலை சாந்தாம்பேட்டை விஏஓ அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சக அலுவலர்கள், அவரை மீட்டு பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : VAO ,SIR ,Peravoorani ,Palanivel ,Kuruvikkarambai ,Munumakkadu ,Thanjavur district ,Kolakudi ,Peravoorani taluka ,Marungapallam ,Santhampettai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...