×

கோவையில் ஓபிஎஸ்சுக்கு ஆயுர்வேத சிகிச்சை

கோவை: கோவை கணபதியில் உள்ள இயற்கை நல மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி வந்து சிகிச்சை பெறுவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார். பின்னர், அவர் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவர் அங்கு 6 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். கோவை விமான நிலையத்தில் அவரிடம் புதிய கட்சி துவங்குவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், பேச வேண்டியது எல்லாம் நேற்றே பேசிவிட்டேன். கோவையில் 6 நாள் தங்கி சிகிச்சைப்பெற உள்ளேன் என பதில் அளித்தார்.

Tags : Coimbatore ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Natural Health Hospital ,Ganapathy, Coimbatore ,Chennai ,Ganapathy ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...