சென்னை: ஸ்குவாஷ் உலகக்கோப்பை சென்னையில் டிச.9-14 வரை நடைபெற உள்ளது என விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் ‘ஸ்வாஷ் உலகக்கோப்பையில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணிக்காக விளையாடும் நான்கு வீரர்களில், மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்த விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது’ எனவும் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
