திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பெத்தலேகம் பகுதியில் 3 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் குழந்தை மூடப்பட்டிருந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.மூடப்பட்ட தொட்டியில் குழந்தை எப்படி விழுந்தது என பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
