- போக்குவரத்து துறை
- அமைச்சர்
- சிவசங்கர்
- அரியலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- போக்குவரத்து அமைச்சர்
- ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம்
அரியலூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பேருந்துகள் இயக்குவதற்கான எரிபொருள் தேவையான அளவில் இருப்பில் உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அளித்த பேட்டி: பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருள் வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடியல் பயணம் திட்டத்தின் வாயிலாக 920 கோடி பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். மகளிர் விடியல் பயணம் திட்டமானது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பெண்களின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. கோடைகாலங்களில் தேவைப்படும் கூடுதல் மின்தேவைகளை கணக்கிட்டு கூடுதல் மின்சாரம் வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பேருந்துகள் இயக்குவதற்கான எரிபொருள் தேவையான அளவில் இருப்பில் உள்ளது. இவ்வாறு கூறினார்.
