×

டெல்லியில் காற்று மாசு அபாயம்: அரசு – தனியார் அலுவலகங்களுக்கு 50% Work From Home

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது. எகியூஐ அளவீடுகள் அபாய வரம்பை தொடர்ந்து தொட்டுள்ளதால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இதனை மிக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதோடு அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக தனியார் நிறுவனங்களும் தங்களின் தளவாட மற்றும் நிர்வாக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆணை சுற்றுசூழல் மற்றும் வனத்துறை சார்பில் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல் திட்டம் அடிப்படையில் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986ன் பிரிவில் 5ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு அதே சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 16ன் கீழ் அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் மாசு காலத்தில் மனித நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தை குறைப்பதில் நோக்கமாக கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் அத்தியாவசிய சேவை துறைகளுக்கான விலக்கு தொடர்கிறது. மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், தீயணைப்பு சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பொது போக்குவரத்து , தூய்மை பணிகள், பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பான அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு அமலுக்கு வராது. பொதுமக்களின் நலனையும் நகரின் செயல்பாடுகளையும் பாதிக்காமல் பாதுகாப்பதில் இதன் முதன்மை நோக்கமாகும்.

டெல்லி காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் உச்சத்தை காண்கிறது. தொழிற்சாலை நச்சு, வாகனத்தில் வர போக்குவரத்து, புறநகர், விவசாய எரிப்பு மற்றும் வானிலை மாசை அடக்கி விடும் நிலையில் ஆகியவை இணைந்து எகியூஐ அளவுகளை அபாயத்துக்கு தூண்டுகிறது. இதை கருத்தில் கொண்டு மக்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்கவும். முக கவசம் பயன்படுத்தவும் வீட்டுக்குள் காற்று சுத்திகரிப்பு சாதனங்களை பயன்படுத்தவும் அரசு மீண்டும் நினைவு படுத்தி உள்ளது.

Tags : Delhi ,Delhi government ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...