×

குடிமை சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்ஐஆரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி குடிமை சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்ஐஆர்-யை கண்டித்து நேற்று அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக எதிர்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு கடண்டன உரையாற்றினார். அப்போது தேர்தல் துறையால் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் மூலம் பொதுமக்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், ஒரு வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயரை நீக்குவது அவரை இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்று அறிவிப்பதற்கு சமம். தற்போது வீடு வீடாக வரும் அதிகாரிகள், ஏழை எளிய மக்களிடம் இல்லாத ஆவணங்களை கேட்டு மிரட்டுவதும், ஆவணம் இல்லாவிட்டால் பெயரை நீக்குவோம் என சொல்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே எஸ்ஐஆர் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இறுதியாக பஷீர் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags : SIR ,Federation of Civil Societies ,Puducherry ,Annasil ,Federation of Puducherry Civil Societies ,Murukanandam ,Shiva ,Kadandana ,
× RELATED இந்திய ரயில்வே மின்மயமாக்கம் 99.2...