×

காசி தமிழ்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்க நலிவுற்ற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

 

தஞ்சாவூர், நவ.25: காசியில் நடைபெறும் தமிழ் சங்க நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் சார்பாக நல சங்கம் சார்பில் நேற்று தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணனிடம் மனு வழங்கினர். அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியதாவது: நலிவுற்ற நாட்டுப்புற இசை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசால் அமைக்கப்பட்டது தான் தென்னக பண்பாட்டு மையம். இது தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் உள்ளது. இந்த தென்னக பண்பாட்டு மையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் உட்பட்ட அலுவலகமாகும். இந்த அலுவலகம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அங்கு பணியில் இருக்கும் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தஞ்சை பகுதியில் வசிக்கும் நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இடைத்தரகர்கள் மூலம் வேறு சில நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்கள். எனவே தஞ்சை மாவட்ட இசை கலைஞர்களுக்கு வாய்ப்புகிடைப்பதில்லை. தஞ்ச்சை மாவட்ட கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கிறது. அதேபோல் தற்போது இசை நிகழ்ச்சி நடத்திய நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு ஊதியம் வழங்காமல் தவிர்க்கின்றனர். மேலும் வாய்ப்பு தேடி தென்னக பண்பாட்டு மையத்தை அணுகினால் ஒருமையில் பேசுவவதாக இசை கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது காசியில் நடைபெற்று வரும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

தஞ்சை மட்டுமல்லாது தமிழகத்தில் வசிக்கின்ற நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என மாநில தலைவர் சத்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் பூச்சி பாஸ்கர், துணைத் தலைவர் மோகன், செயலாளர் மதியழகன், பொருளாளர் தமிழரசன், மாவட்ட மகளிர் அணி தலைவி மரகதம், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சத்தியஜோதி மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ள நலிவுற்ற இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thanjavur ,Tamil Nadu All Folk Artists Welfare Association ,Thanjavur Southern Cultural Center ,Gopalakrishnan ,Tamil Nadu ,Kashi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...