திருவாரூர், நவ. 25: திருவாரூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் தேசிய வங்கி கிளைகளில் நாளை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் அனைத்து தேசிய வங்கி கிளைகள் இணைந்து நடத்தும் கல்விக்கான வங்கி கடன் முகாம் 27ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து வங்கி கிளைகளிலும் நடைபெறுகிறது.
எனவே இந்த முகாம்களில் கல்விக்கான வங்கி கடன் தேவைப்படும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
