×

திறனாய்வுப் பயிற்சி

 

பழநி, நவ. 25: பழநியில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான உணவு பதப்படுத்துதல் குறித்த திறனாய்வு பயிற்சி நடந்தது. தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் சமையல் கலை வல்லுநர் சுப்பிரமணி உணவுப்பொருட்களை பதப்படுத்தும் முறை குறித்தும், உணவுப்பொருட்களை தயாரிக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கமளித்தார். பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், ஊறுகாய், டோனட் வகை இனிப்புகள் உட்பட பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யும் முறை குறித்தும், அதன் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Palani ,Subramani ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...