×

குறைதீர் கூட்டத்தில் 382 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம், நவ.25: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 382 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kanchipuram ,Kanchipuram Collectorate Office Complex People's Reconciliation Center ,Collector ,Kalaiselvi Mohan ,
× RELATED டிட்வா புயல் மழை காரணமாக நீரில்...