×

வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி வழித்தட புதிய பேருந்து இயக்கம்

*நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் மகளிர் விடியல் பேருந்தை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்.

வேதாரண்யத்தில் இருந்து கரியாப்பட்டினம் வழித்தடத்தில் மகளிர் விடியல் பேருந்து புதிதாக இயக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்தை வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஹரிகிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ரவி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தினசரி இந்த பேருந்து ஆறு முறை இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர்சுரேஷ்குமார் தெரிவித்தார்.

Tags : Vedaranyam-Thiruthuraipoondi route ,Municipal Chairman ,Vedaranyam ,Women's Dawn Bus ,Nagapattinam district ,Women ,Dawn Bus ,Kariyapattinam ,Vedaranyam… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...