டெல்லி: டெல்லியில் காற்று மாசை எதிர்த்து போராட்டம் நடத்திய 15 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி இந்தியா கேட் அருகே குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் மிளகாய்ப்பொடியை தூவியதாக புகார் எழுந்துள்ளது. பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் ஹித்மாவை வாழ்த்தி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
