- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்
- யூனியன் அரசு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராயப்பேட்டை, சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- ஜனாதிபதி
- மு. பன்னீர்செல்வம்
- கோவை செல்வம்
- வாழப்பாடி ராமா
- கர்ணன்
- துறைமுக
- முனுசாமி
சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் கோவை செல்வம், வாழப்பாடி இராம.கர்ணன், துறைமுகம் முனுசாமி, கோபிநாத் பன்னீர்செல்வம், ஆலந்தூர் நாகராஜ், ஜி.ஜெயபால், எம்.ராஜேஸ்வரி, வழக்கறிஞர் ஜி.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 3 பேர் கொண்ட நிர்வாக குழுவை நியமித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் இல்லாத காலத்தில் தீவிரமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது வழக்கமாக நடத்தப்படும் பயிற்சியாக இருந்தாலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை என்ஆர்சி செயல்படுத்துவதற்கான மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் எஸ்ஐஆர் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
அரசு போக்குவரத்து தொழிற்சங்களுடன் நிர்வாகமும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். பென்ஷன் தொகையை மாதத்தின் முதல் நாளே வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தினக்கூலி கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்பதை ஊக்குவிக்காமல் அரசு துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள ஓய்வு பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் மாதம் ஐந்தாயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
