×

2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: ‘2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனை திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் நோக்கம். மக்களாட்சியின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதே திராவிட மாடல் அரசு. ‘உங்க கனவ சொல்லுங்க’ என்று வீடு தேடி வரவுள்ள எங்களது குழுவிடம் கனவை பகிருங்கள். 2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி. உங்கள் கனவு நனவானால்; தமிழ்நாட்டின் கனவுகள் நனவாகும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,X ,Chennai ,M.K. Stalin ,X platform ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...