சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தமிழ் இலக்கியத்துக்கு அளவிட முடியா பங்களிப்பைச் செய்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் மகா கவிஞர் பாப்லோ நெரூதா வரை தனது இலக்கியச் சிறகை விரித்தவர். கலைஞர் நேசிப்புக்குரிய எழுத்துலக நண்பர். மரபுக் கவிஞராய் தொடங்கி புதுக்கவிதையிலும் புதிய அலைகளை ஏற்படுத்திய படைப்பாளி. ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் தமிழன்பன், திராவிட இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்றுக் கொண்டிருந்தார். ஈரோடு தமிழன்பன் மறைவு, இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வாசகர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். இதேபோல் அமைச்சர் சாமிநாதனும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
