×

ஆஸி ஓபன் பேட்மின்டன்: இறுதி போட்டியில் இந்திய வீரர் சென்; ஜப்பான் வீரர் யூஷியுடன் மோதல்

சிட்னி: ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் நேற்று இந்திய வீரர் லக்சயா சென் அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், தைவான் வீரர் சோ டியன் சென் மோதினர். இப்போட்டியில் இருவரும் விட்டுத்தராமல் ஆக்ரோஷமாக மோதியதால் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை லக்சயா சென் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 17-21, 24-22, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஜப்பான் வீரர் யூஷி தனாகா, தைவான் வீரர் லின் சுன் யி மோதினர். துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீரர் தனாகா, 21-18, 21-15 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அதையடுத்து, லக்சயா சென்னும், யூஷி தனாகாவும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.

Tags : Aussie Open Badminton ,Sen ,Yoshi ,Sydney ,Lakshya Sen ,Australian Open badminton ,Sydney, Australia ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு...