புதுக்கோட்டை,நவ.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை என்ற திட்டத்தில் பிரதி மாதம் 2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில் தேர்வு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
பிரதி மாதம் தேர்வு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், தோட்டக்கலைத் உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், அமைத்து முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் பல்கலைக் கழகவிஞ்ஞானிகள் கலந்துகொண்டு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள்,
உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் மற்றும்விழிப்புணர்வு, கள பிரச்சினைகளுக்கு உகந்த தொழில்நுட்பங்கள்வழங்கி வருகிறார்கள். எனவே, தங்கள் கிராமங்களில் நடைபெறும்மேற்கண்ட முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டுபயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும்தெரிவித்துள்ளார்.
