- பல்வீர் சிங்
- மதுரை
- ஐபிஎஸ்
- நீதிமன்றம்
- நெல்லை
- அம்பாசமுத்திரம்
- அனைத்து பெண்கள் காவல் நிலையம்
- விகே.புரம்
- Kallidaikurichi
- பாபகுடி
- Manimutharu
மதுரை: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை அம்பாசமுத்திரம் அனைத்து பெண்கள் காவல் நிலையம், விகே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். என்னை இந்த பொறுப்பில் இருந்து அகற்றும் நோக்கத்துடன் சிலர் பெய்யான குற்றச்சாட்டுகளை அளித்துள்ளனர். சட்டவிரோத காவலில் வைத்து அருண்குமார் என்பவரது பல்லை உடைத்ததாக கூறப்படும் வழக்கும் அவ்வாறு பதியப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஷமீம் அகமது, முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மனுதாரர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலில் ஈடுபட்டார். எனவே, அவரது கோரிக்கை ஏற்புடையதல்ல’’ என கூறப்பட்டது. பாதிக்கப்பட்டோர் தரப்பில், ‘‘மனுதாரர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட நபர் தரப்பையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழ் மொழியில் விசாரணை நடத்தி, தமிழ் மொழியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பில்லை. இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை. எனவே, நெல்லை மாவட்ட நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், நீதிமன்ற விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.
