- ரன்யா ராவ்
- பெங்களூரு
- வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
- பெங்களூரு சிறப்பு பொருளாதார மண்டல நீதிமன்றம்
- துபாய்…
பெங்களூரு: சட்டவிரோத தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை முடித்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், நடிகை ரன்யா ராவ் உட்பட நான்கு குற்றவாளிகள் மீது பெங்களூரு சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் 2,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். துபாயில் இருந்து பெங்களூருக்கு கடந்த மார்ச் 3ம் தேதி எமிரேட்ஸ் விமானத்தில் வந்த நடிகை ரன்யாராவை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.12 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள 14,213 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் காபிபோசா சட்டத்தின் கீழ் நடிகை ரன்யாராவ் கைது சிறையில் உள்ள நிலையில், அவர் மீதான புகாரை விசாரணை நடத்தி வரும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். சுமார் 2,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யாராவ், அவரது கூட்டாளிகள் தருண்கொண்டராஜு, பரத்குமார் ஜெயின், சாஹில் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
