கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த பணிகளை நிறுத்துமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு ஒத்திகைப் பணிகளை தொடங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. துணை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல் நிலை சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
