வேலூர் மாவட்டத்தில் 67.60 மில்லி மீட்டர் மழை பதிவு

வேலூர், ஜன.7: வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மொத்தம் 67.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மார்கழி மாதத்தை முன்னிட்டு கடும் குளிர் வாட்டி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டம் முழுவதும் லேசான மழை ெபய்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்றும் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பதிவான மொத்த மழை அளவு 67.60 மி.மீ. சராசரி மழை அளவு 11.27. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில்: குடியாத்தம் 9, காட்பாடி 12.1, மேலாலத்தூர் 8, பொன்னை 8.4, வேலூர் 13.9.

Related Stories:

>