×

மண்டல அளவிலான செஸ் போட்டி புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு வெள்ளிபதக்கம்

நாகர்கோவில், நவ. 22: கோவை மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், மண்டலங்களுக்கு இடையேயான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 19வது மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்ட நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை 3ம் ஆண்டு மாணவி ரியா சானோன் வெள்ளி பதக்கம் வென்றதுடன், அண்ணா பல்கலைக்கழக செஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளையும், வழிநடத்திய கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் ராஜா மற்றும் சகாய எமர்லின் ஜோசிலா, பேராசிரியர் புளோரின் ராஜா சிங் ஆகியோரை கல்லூரி தாளாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ், நிதி நிர்வாகி சேவியர்ராஜ், முதல்வர் மகேஸ்வரன், துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங், மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்டின் திரவியம், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.

Tags : St. Xavier's Catholic Engineering College ,Nagercoil ,Anna University ,Coimbatore ,Sungakkadai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...