×

ரூ.68 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், நவ.22: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் மங்களம், மேல்முகம், பீமரப்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடையுள்ள 15 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் ரூ.120. முதல் ரூ.180.50 வரையும், 2ம் தரம் ரூ.85.99 முதல் ரூ.115.10 வரை என மொத்தம் ரூ.68,400 வரை ஏலம் போனது. ஈரோடு, காங்கேயம், கோவை வியாபாரிகள் கலந்துகொண்டனர். அடுத்த ஏலம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : MLACHAMUTHIRAM ,MULLASAMUTHIRAM ,TRICHENGOD AGRICULTURAL PRODUCERS COOPERATIVE SALES ASSOCIATION ,Mangalam ,Melmugham ,Bhimarapatti ,Parthipalli ,Ramapuram ,
× RELATED முதியவரின் இறுதிச்சடங்கில் டூவீலர் பாய்ந்து 15 பேர் காயம்