×

கனமழை காரணமாக கோவை புலியகுளத்தில் வீடு இடிந்து விழுந்தது

கோவை, ஜன.7: காற்றழுத்து தாழ்வு  காரணமாக கோவை மாநகரில் ஒரு சில நாட்களாக சாரல் மழை பெய்து வருக்கிறது. நேற்றும் மாலை முதல் இரவு வரை காந்திபுரம், கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், உக்கடம், பீளமேடு, போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் புளியகுளம் பகுதியில் உள்ள அம்மன்குளம் ராஜிவ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்தது.  ஒரு சில இடங்களில்  மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் பொங்கல் பண்டிகையோட்டி பொருட்கள் வாங்க குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள் மழை நிற்கும் வரை  கடைகளில் காத்து கிடந்தனர். வெகு நேரம் மழை பெய்ததால் கோவை ஆர்.எஸ் புரம் புரூக்பாண்ட் சாலை, பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள  சாக்கடைகள் நிரம்பி சாலையில் சாக்கடை நீர் வழிந்தோடியது. மேலும் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள்  அவதியடைந்தனர்.

Tags : house ,Coimbatore ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்