×

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி: நவ.27ல் நடக்கிறது

மதுரை, நவ. 21: மதுரையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக மரபு வார விழாவை ஒட்டி தொல்லியல் துறை சார்பில் ஓவியப்போட்டி நடக்கிறது. இதுகுறித்து மதுரை தொல்லியல் துறை அதிகாரி ஆனந்தி கூறியதாவது: உலக மரபு வார விழாவை முன்னிட்டு, தொல்லியல் துறை சார்பில் மதுரையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நவ.27ம் தேதி காலை 11 மணிக்கு ஓவியப்போட்டி நடக்கிறது.

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நடக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் முன்னதாக, 99404 09514 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தங்களது பெயர், வகுப்பு மற்றும் பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதத்தை கொண்டு வர வேண்டும். ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்படும். பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிழ்களும் வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Tags : Madurai ,Madura ,World Heritage Week ,Department of Archaeology ,Madurai Archaeological Department ,Anandi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...