- வேதாரண்யம் மேற்கு ஒன்றியம்
- வேதாரண்யம்
- ஆயக்காரன்புலம்
- மருதூர்
- தணிக்கட்டகம்
- தக்கத்தூர் பஞ்சநாதிகுளம்
- காருப்பம்புளம்
- தென்னடார்
- அண்ணா பேட்டை
- வண்டுவாஞ்சேரி
- வேதாரண்யம் தாலுகா
- நாகை மாவட்டம்
- நாகை மாவட்ட திமுக...
வேதாரண்யம், நவ. 21: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம், மருதூர், தாணிக்கட்டகம், தகட்டூர் பஞ்சநதிக்குளம் , கருப்பம்புலம், தென்னடார், அண்ணபேட்டை, வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது. முகாமினை நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கௌதமன் நேரில் சென்று ஆய்வு செய்து பாகமுகவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகாகுமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அசோக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
