×

நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைக்கும்போது விபரீதம் கிரேன் ரோப் அறுந்து விழுந்து தொழிலாளி பலி

உளுந்தூர்பேட்டை, நவ. 21: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கன்னியப்பன் (46) இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் – திருக்கோவிலூர் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழி சாலை போடும் பணியில் கிலோ மீட்டர் பெயர் பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை திருக்கோவிலூர் சாலையில் கிலோமீட்டர் பெயர் பலகை வைக்கும் பணியில் கிரேன் மூலம் ஈடுபட்டு வந்த கன்னியப்பன் திடீரென கிரேன் ரோப் அறுந்ததில் கீழே விழுந்த கன்னியப்பன் தலையில் படுகாயம் அடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கன்னியப்பன் சடலம் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Ulundurpettai ,Krishnamoorthy ,Kanniyappan ,Sokkanandal ,Melmalaiyanur ,Villupuram district ,Asanur-Thirukovilur State Highway Department ,Kallakurichi district ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...