சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருநாவுக்கரசு மனு அளித்திருந்தார். பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது கோவை நீதிமன்றம் மே 13ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பு வெளியாகி 60 நாள்களுக்குள் மனுதாக்கல் செய்ய வேண்டிய நிலையில் தாமதம் குறித்து ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தார்.
