×

ஆந்திராவில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி

 

சென்னை; ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மை பிரிவு குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆந்திராவை பொருத்தமட்டில் இடைநிலை கல்வி வரையிலும் பயிலக் கூடிய சிறுபான்மை சமூகத்தின் பெண்களுக்கு இடைநிலைக்கல்வி வரையிலும் இலவசக் கல்வி வழங்க அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையிலான ஒரு முன்மாதிரி திட்டத்தை அவர் செயல்படுத்தி இருக்கிறார்.

எனவே இடைவெளி இல்லாமல் கல்வியை அனைவரும் தொடர்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இதனால் அந்தக் குழந்தைகளின் தலையெழுத்து மட்டுமல்லாது அவர்களின் வருங்கால சந்ததியினரின் வாழ்வையே மாற்றும் வகையில் இந்த திட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அரசின் சார்பில் மானியம் வழங்கப்படும் என்பதும் இஸ்லாமியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது ஆந்திராவில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு முடிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

அடுக்கடுக்கான நல்ல பல திட்டங்களை சிறுபான்மை மக்களுக்கு செய்து தரும் முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடுவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : President ,Abubakar ,Chief Minister ,Chandrababu Naidu ,Andhra Pradesh ,Chennai ,Indian Haj Association ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு