×

கும்பகோணம் அருகே கிணற்றிலிருந்து நீர் பொங்கியதை நினைவுகூரும் விழா: நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடும் பக்தர்கள்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிசை நல்லூரிலுள்ள தனியார் மடத்தில் உள்ள கிணற்றில் நடைபெற்று வரும் புனித கங்கை நீராடல் நிகழ்வில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் பாக்கேற்றனர். திருவிடைமருதூர் அருகே திருவிசை நல்லூரில் ஸ்ரீதர் ஐயாவாள் மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று கங்கை பொங்கிவருவதாக அப்பகுதி மக்கள் இடையே ஒரு ஐதீகம் உள்ளது. அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவசை தினத்தன்று அங்கு புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இன்று கார்த்திகை மாதம் அமாவாசை தினம் என்பதால் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் ஸ்ரீதர் ஐயாவாள் மடத்திலுள்ள கிணற்றில் நீராடி வருகின்றனர். அதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று நீராடி வருகின்றனர். இதனையடுத்து கார்த்திகை அமாவசை நாளில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து அந்த கிணற்றில் புனித நீராடல் கொண்டு வேண்டி வருகின்றனர்.

Tags : Kumbakonam ,holy Ganges waterfall ,Thiruvissa Nallur ,Srithar Iyawal Monastery ,Thiruvisa Nallur ,Thiruvidaymarathur ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள...