×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 1% குறைவு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 1 % குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பாக 433.1 மி.மீ மழை பொழியும் நிலையில், தற்போது 427.2 மி.மீ மழை பெழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 788.8 மி.மீ மழை பொழியும் நிலையில், தற்போது 724.8 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Meteorological Centre ,Northeast of Chennai ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்...