×

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.  ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் இன்று மறைந்த ஆன்மீக தலைவர் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் பாபாவின் சன்னதி மற்றும் மகாசமாதியையும் அவர் பார்வையிடுகின்றார். விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் நீடித்த பாரம்பரியத்தை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயம், சத்ய சாய் பாபா குறித்த தொகுப்பை அவர் வெளியிட்டு உரையாற்றுகின்றார்.

Tags : Modi ,Sathya Sai Baba ,New Delhi ,Andhra Pradesh ,Puttaparthi ,Modi… ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...